தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் சென்ற படகு போகும் வழியில் நிலை தடுமாறியது. இதை கவனித்த கார்த்திக் மற்றும் வசுந்தரா இருவரும் சேர்ந்து தமிழ் படகுக்கு அருகில் வந்து காப்பாத்த முயற்சி செய்தார்கள். இரு படகையும் இணைத்து ஒரு படகாக மாற்றி கார்த்திக் ஒரு துடுப்பையும் தமிழ் ஒரு துடுப்பையும் வைத்து சமாளித்து கரைக்கு வந்து சேர்ந்தார்கள். இதனால் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் கார்த்திக்கை பாராட்டினார்கள். தமிழ் சரஸ்வதி இருவருமே அவருக்கு நன்றியும் கூறினார்கள். அதே நேரம் வசுந்தரா அவரை மேலும் பாராட்டும் போது, யாராக இருந்தாலும் இப்படி தான் செய்து இருப்பேன். அதுவும் என் அண்ணன் அண்ணி அவர்கள் அதனால் தான் காப்பதினேன் என்றும். மேலும் இதனால் அவர்கள் மேல் இருந்த கோபம் எதுவும் போகவில்லை எனவும் கூறினார். அதை கேட்ட வசுந்தரா அதிர்ச்சி அடைந்தார். ஆனால் தமிழும் சரஸ்வதியும் இவளோ தூரம் கார்த்திக் மாறி வந்ததே பெரிய விஷயம் என்று நினைத்தார்கள். பின் அவர்களது அறைக்கு கிளம்பினார்கள். போகும் வழியில் நாலு ரவுடிகள் சேர்ந்து வம்புக்கு இழுத்தார்கள். கோவத்தில் கார்த்திக்கும் மல்லுக்கு நின்றார். ஆனால் தமிழ் இருவரையும் சமாதானம் செய்து பார்த்தார். ஆனால் அந்த ரவுடிகள் தமிழை மன்னிப்பு கேட்டு தலை குனிந்து கை எடுத்து கும்பிட்டு போட வேண்டும் என்று கூறினார்கள். அதையும் தமிழ் செய்தார். இதனால் கார்த்திக் மேலும் கோவத்தின் உச்சத்துக்கு சென்றார். அவர்களிடம் சண்டை போடுவதை விட்டுசிப்படி மன்னிப்பு கேட்டது கார்த்திக்கு பிடிக்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…