Tamizhum Saraswathiyum Today Episode | 27.10.2021 | Vijaytv
Tamizhumsaraswathiyum.27.10.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை வீட்டுக்கு வந்தாலும் அவரது நினைப்பு முழுவதும் சரஸ்வதியை பற்றியே இருந்தது. வீட்டில் அனைவருக்கும் பார்த்து பார்த்து துணி எடுத்த விதம், மற்றவர்களுக்கு மரியாதை செய்யும் விதம் என்று அனைத்தையும் ரசித்தார் கோதை. பின் நமச்சிக்கும் கோதை வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிற்கும் துணிகள் எடுத்து கொடுத்தார் கோதை. வசுந்தராவும் சந்திரகலவிடம் அங்கு அவர் மிகவும் சந்தோஷமாக இருந்ததாக கூறினார். சரஸ்வதியை பற்றியும் கூறினார். சந்திரகலா யார் அந்த பெண் என்று யோசிக்க ஆரம்பித்தார். தமிழ் சரஸ்வதிக்கு தொலைபேசியில் அழைத்து, கோதையின் மானதில் நீங்கா இடம் பெற்றதாக கூறினார். கோதை நடேசனை தனியாக அழைத்து சரஸ்வதியை தமிழுக்கு திருமணம் முடித்தால் நல்லார்க்கும் என்று கூறினார். நடேசனும் அதற்கு சரி என்றே கூறினார். ஆனால் கோதை நாளைக்கே சென்று பெண் கேட்டு வரலாம் என்று கூறினார். அதற்கு நடேசன் அவசரம் வேண்டாம். கார்த்திக் திருமணம் முடிந்ததும் இந்த வேலையை ஆரம்பிக்கலாம் என்று கூறினார். மேலும் விவரங்களுக்கு காணொளியை பார்க்க…