Tamizhum Saraswathiyum Today Episode | 27.10.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கம்பேனியில் தொழிலாளர்கள் சம்பளம் போட தாமதம் ஆவதால் அனைவரும் வேலை நிறுத்தம் செய்வோம் என்று பேசிக்கொண்டார்கள். அதை கேட்ட நமச்சி அதை தடுக்க முயற்சி செய்தார். மேலும் ஒரு சில நபர்கள் கோதை அம்மா மேல் உள்ள மரியாதையில் இதெல்லாம் வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் ராம் மீதம் உள்ளவர்களை வேலை செய்ய விடாமல் செய்தார். பின் ஸ்ட்ரைக் ஆரம்பிக்க வேண்டும் என்று கிளம்பினார்கள். இதை கேள்விப்பட்ட கோதை, நடேசன், தமிழ் கார்த்திக் அனைவரும் வந்தார்கள். அவர்களிடம் கோதை அம்மாவே பேச ஆரம்பித்தார். இந்த தவறை மன்னித்து விடுங்கள் என்று கெஞ்சி பார்த்தார். ஆனால் அதையும் கேட்கும் நிலையில் இல்லை யாரும். ஸ்ட்ரைக் செய்ய கிளம்பும் நேரம் மூன்று கோடி ரூபாய் அகவுண்டில் வந்தது. யாரோ அனுப்பி இருப்பதாக நினைத்து உடனே அந்த பணத்தில் அனைவருக்கும் சம்பளமும் போடப்பட்டது. சற்று நேரத்தில் பணம் போட்டது ஆதி என தெரிய வந்தது. பின் சந்திரகலா மற்றும் ஆதி இருவரும் அங்கு வந்தார்கள். வந்தவுடன் அவர்கள் அந்த சூழ்நிலையை பயன்படுத்தி அவர்களது செல்வாக்கை பெருமையாக பேசினார்கள். ஆதி தான் ஏற்பாடு செய்ததாக அழுத்தமாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author