தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதையின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் அடைந்ததால், டாக்டர் அவரை வீட்டிற்கு போகலாம் என்று கூறினார். பின் அதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள்.கோதை இடம் நடேசன், நம் குடும்பத்துக்கு துணையாக நின்று எல்லாத்தையும் நம் சம்பந்தி அம்மா தான் பார்த்துக்கொண்டார் என்று கூறினார். சந்திரகலா அந்த டாக்டரை பார்த்து, இரத்தம் கொடுத்தது தமிழ் தான் என்று சொல்ல வேண்டாம், அதனால் குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறினார். அந்த டாக்டரும் அதை சொல்ல மாட்டேன் என்று கூறினார். கோதை டாக்டரை பார்த்து முதல் கேள்வியாக, எனக்கு யார் இரத்தம் கொடுத்தது என்று தான் கேட்டார். ஆனால் அவர் அதை சொல்ல மறுத்துவிட்டார். பின் மருத்துவமனை செலவு கணக்கு வழக்கு எல்லாம் தானே முடித்துவிட்டதாக சந்திரகலா கூறினார். பின் அனைவரும் வீட்டிற்கு திரும்பினார்கள். வீட்டுக்கு வந்ததும் அபி ஆரத்தி எடுத்து கோதையை வரவேற்றார். தன் வீட்டையே எதோ முதல் முறை பார்ப்பது போல் பார்த்தார் கோதை. தன் வீட்டில் வரைந்தை வைத்திருக்கும் சரஸ்வதி சாமியின் படம் பார்த்து பழசை நினைத்து பார்த்தார். பின் குடும்ப படத்தை பார்த்து வருத்தம் கொண்டார். அதை பார்த்த சந்திரகலா உடனே அதை அகற்றுமாறு கூறினார். ஆனால் கோதை அதை தடுத்து, தமிழ் சரஸ்வதி இருவரும் எங்கே என்று கேட்டார். வசுந்தரா அவர்கள் சரஸ்வதி வீட்டில் தான் இருக்கிறார்கள் என்று கூறினார். உடனே அவர்களை அழைத்து வீடுக்கு வர வேண்டும் என்றார் கோதை. இதை கேட்டதும் வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். சந்திரகலா அதை கேட்டு அதிர்ச்சியில் நின்றார். அவர்கள் வீடு இதுதான், இங்கு தான் இருக்க வேண்டும் என்றார். இதை கேட்ட வசு, உடனே சரஸ்வதிக்கு அழைத்து விஷயத்தை கூறினார். தகவலை கேள்வி பட்டதும் தமிழ் சரஸ்வதி மற்றும் குடும்பத்தில் அனைவரும் மகிழ்ச்சியில் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…