தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி பரிட்சை எழுத தயார் ஆனார். காய்ச்சல் குறைந்து விட்டது என்று கூறினார். தமிழ் அவருக்கு சாப்பாடு ஊட்டுவது, தண்ணீர் கொடுப்பது என்று பார்த்து பார்த்து அனைத்தையும் செய்தார். கோதை வீட்டுக்கு காலையிலே தில்லு முல்லு வேலை செய்ய கீதா வீட்டுக்கு வந்து இருந்தார். வீட்டில் அனைவரிடமும் நல்லவர் போல் பேசி நடித்தார். சரஸ்வதி அறைக்கு சென்று நலம் விசாரிப்பது போல் பேசினார். அவர்கள் அசந்த நேரம் பார்த்து சரஸ்வதிக்கு வைத்து இருந்த மாதிரையுடன் தூக்க மாத்திரையை கலந்து வைத்தார். பின் அவர் வந்த வேலை முடிந்தது என்று கிளம்பினார். இது தெரியாமல் தமிழ் அந்த மாத்திரைகளை சரஸ்வதிக்கு கொடுத்தார். பின் பரிட்சைக்கு கிளம்பினார்கள். ராகினி இப்போது காய்ச்சல் எப்படி உள்ளது என்று பரிசோதித்தார். சரஸ்வதி வருகைக்காக சொக்கலிங்கம் மற்றும் வாசுகி காத்திருந்தார்கள். பின் சரஸ்வதி சோர்ந்து போய் வருவதை பார்த்து மிகவும் பதட்டம் ஆனார்கள். இன்று பரிட்சை எழுத வேண்டாம் என்றும் கூறினார். ஆனால் சரஸ்வதி பிடிவாதமாக எழுதினார். ஆனால் தூக்கம் சொக்கியது அவருக்கு. அதையும் தாண்டி அந்த பரீட்சையை எழுதி முடித்தார். கடைசியில் மயக்கம் போட்டு விழுந்தார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள். டாக்டர் அவரை பரிசோதித்து ஒரு பிரச்சனையும் இல்லை என்று கூறினார். ஆனால் அவர் இரத்தத்தில் தூக்க மாத்திரை கலந்து இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்தார்கள். பின் வீட்டுக்கு திரும்பிய தமிழ் சரஸ்வதி இருவரும் நடந்த அனைத்தயும் கூறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…