Tamizhum Saraswathiyum Today Episode | 28.06.2023 | Vijaytv

tamizhum Saraswathiyum. 28.06.2023

tamizhum Saraswathiyum. 28.06.2023

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் தன்னை மன்னித்து அப்பாவாக ஏறுக்கொண்டதை அடுத்து நடேசன் மகிழ்ச்சியில் இருந்தார். தமிழோடு சேர்ந்து இனிப்பு சாப்பிடுவது, நமச்சியை கேலி கிண்டல் செய்வது என்று குதூகலமாக இருந்தது. மேலும் இந்த வெற்றியை தொடர்ந்து நிறைய பொறுப்புகள் வந்து சேரும், அதையும் கண்டிப்பாக நல்ல முறையில் செய்து முடிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார் நடேசன். தமிழ் வீட்டில் இருந்து வெளியே வரும்போது அர்ஜுனின் மாமா பார்த்துவிட்டார். உடனே அதை வீட்டில் சொல்லி அதை பிரச்சனை ஆக்க வேண்டும் என்று நினைத்தார். அனைவரும் சாப்பிட வரும் நேரம் நடேசன் தமிழ் வீட்டுக்கு சென்றதை போட்டு கொடுத்தார். வீட்டில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். ஆனால் நடேசன் எந்த வித பதட்டமும் இல்லாமல் வெற்றி பெற்றதற்கு கண்டிப்பாக வாழ்த்து சொல்ல வேண்டும். அதை சொல்லவே நான் சென்றேன் என்று கூறினார். அதை கேட்டு கோதை ஆத்திரம் அடைந்தார். தான் அசிங்கப்பட்டு நிர்ப்பதை பார்த்ததும் அவனுக்கு வாழ்த்து சொல்ல சென்றீர்களா என்று கேட்டார். அதற்கு நடேசன், உன்னை தோற்கடிக்க அவன் எதுவுமே செய்யவில்லை. நம் வீட்டில் இருப்பவர்கள் செய்த காரியத்தால் தான் நமக்கு இந்த தோல்வி. இதில் அவன் மீது கோபப்பட எதுவும் இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author