Tamizhum Saraswathiyum Today Episode | 28.10.2021 | Vijaytv Serial Reviews By Idamporul
tamizhumsaraswathiyum.28.10.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் வசுந்தராவின் திருமண பத்திரிக்கைகள் வந்து சேர்ந்தன. அதை பிரித்து பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர். கோதை முதல் பத்திரிக்கை சாமிக்கு வைத்துவிட்டு தாய்மாமாவுக்கு தான் வைக்க வேண்டும் என்று கூறினார். சந்திரகலா மந்திரிக்கு தான் முதல் பத்திரிக்கை வைப்பதாக முடிவு செய்தார். பின் கோதை மந்திரிக்கு வைப்பதை விட தாய்மாமனுக்கு வைப்பதுதான் முறை என்று கூறினார்.வேண்டும் என்றால் சந்திரகலா மட்டும் அவருக்கு வைக்கடும் என்று கூறினார். இதைகேட்ட சந்திரகலா கோபம் கொண்டார். பின் கோதை தன் அண்ணன் வீட்டிற்க்கு சென்றால் பத்திரிக்கை வைக்க. அங்கு கலா கோதையை குத்திக்காட்டுவது போல் பேசினார். அண்ணன் இருக்கும்போது தம்பிக்கு திருமணம் செய்வதே ஒரு வேதனை தான். அதனால் சீக்கிரம் தமிழுக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் கோதை நான் ஏற்கனவே பெண் பார்த்துவிட்டதாகவும் அவள் தான் என் வீட்டு மூத்த மருமகள் எனவும் கூறினார். பொண்ணு M.B.A படித்து இருப்பதாகவும் கூறினார்.இதை கேட்ட கலா அடுத்து என்ன செய்தார்? காணொளியை பார்க்க…