Tamizhum Saraswathiyum Today Episode | 28.11.2022 | Vijaytv
Tamizhum Saraswathiyum. 28.11.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை அவரது வீட்டு மருமகள்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் திருமணத்தில் நடந்த சங்கடங்களுக்கு நடுவில் வசுந்தரா சரஸ்வதி இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால். அதை பற்றி விசாரித்தார். அதற்கு வசுந்தரா அதான் எல்லா பிரச்சனைகளும் சரி ஆகி விட்டதே இனிமே எனக்கு என்ன பிரச்சனை என்று கூறினார். இதனால் சரஸ்வதியும் வசுந்தரா தன்னை புரிந்து கொண்டார் என்று சந்தோசம் கொண்டார். பின் கோதை இந்த குடும்பத்துக்கு நல்லது நடக்க போராடிய தமிழ் மற்றும் சரஸ்வதி இருவருக்கும் பரிசு ஒன்று தர வேண்டும் என்று கூறினார். அதை கார்த்திக் மற்றும் வசுந்தரா கையால் தமிழ் சரஸ்வதி இருவருக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் வசுந்தராவுக்கு சரஸ்வதி மேல் இருக்கும் கோவம் குறையவும் இல்லை, அவரை அவர் பழைய படி ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அதை சரஸ்வதி தனியாக இருக்கும்போது அவர் முகத்துக்கு முன்னே சொல்லி அவரை காயப்படுத்தினார். இதனால் சரஸ்வதி மனம் நொந்து போய் தமிழிடம் புலம்பினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…