தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் வேண்டும் என்றே கார்த்திக்கை அந்த கம்பேனிக்கு அழைத்து சென்று அங்கு உள்ள நிலவரங்களை பார்க்க வைத்தார். அதை பார்த்ததும் கார்த்திக் அனைத்துமே தம் முன்னேற்றத்திற்கு ஏற்ப இருப்பதாக நினைத்தார். மேலும் அந்த கம்பேனி ஓனர் இடமும் பேசினார். அவர் 13 கோடிக்கு தர உள்ளதாக கூறினார். அதையும் குறைத்து கண்டிப்பாக 12 கோடியாவது கொடுத்தால் தான் இது சாத்தியம் என்று அர்ஜுன் பேசினார். பின் அதற்கும் ஒத்துக்கொள்ளும் படி பேசினார் அந்த ஓனர். பின் இன்றே ஒரு 10 லட்சம் வரை முன் பணமாக கொடுத்தால் நல்லது என்று கூறினார். உடனே அர்ஜுன் கார்த்திக் மனதை மாற்றினார். இது போல் ஒரு நல்ல வாய்ப்பு இனி கிடைக்குமா என்று தெரியாது. இப்போதே அதற்கு வாங்கினால் நல்ல லாபம் என்று கூறினார். இதையும் கேட்டு உடனே 10 லட்சத்தை கார்த்திக் அந்த ஓனருக்கு குடுத்தார். பின் வீட்டுக்கு வந்து கார்த்திக் இது போன்ற ஒரு விஷயம் நடந்தது, அதற்காக 10 லட்சம் கொடுத்து விட்டேன் என்று கூறினார். உடனே கோதை அம்மாவும் நடேசன் அப்பாவும் கோவத்தில் கத்தினார்கள். எதற்காக இப்படி யாரிடமும் கேட்காமல் எந்த முடிவும் குடும்பமாக எடுக்காமல் எப்படி தனியாக முடிவு எடுக்கலாம் என்று கத்தினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….