Tamizhum Saraswathiyum Today Episode | 29.03.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கீழே கிடந்த மாத்திரை அட்டையை ராகினி இடம் காட்டி அது என்ன மாத்திரை என்று கேட்டார். ராகினி அதை பார்த்து இது தூக்க மாத்திரை, இதில் பாதி சாப்பிட்டாலே 5 மணி நேரம் வரை தூக்கம் வரும். இது அளவுக்கு அதிகமானால் உயிருக்கே ஆபத்து என்று கூறினார். இதை கேட்ட தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே தமிழ் சரஸ்வதியிடம் ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்று கூறினார். யாரிடம் என்ன சபதம் போட்டாய் என்று கேட்டார். சரஸ்வதி இதை சம்பந்த பட்டவர் இடம் கேட்காமல் இருந்தால் தான் உண்மையை சொல்வேன் என்றார். பின் கார்த்திக் கம்பேனியில் நடந்தது கொண்ட விதம் பற்றி சரஸ்வதி கூறினார். இதனால் தான் நான் பரிட்சை எழுத வேண்டும் என்று உறுதியாக இருந்தேன் என்றார். உங்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்க வேண்டும் என்றார். பின் சற்று நேரத்தில் இந்த வேலையை கார்த்திக் செய்ய வாய்ப்பு இல்லை. இந்த சபதம் பற்றிய விஷயம் சந்திரகலாவுக்கு தெரிந்து கீதா மூலமாக இந்த செயலை செய்து இருப்பர் என்று தமிழ் நம்பினார். உடனே சந்திரகலா வீட்டுக்கு சென்றார். அங்கு கீதா தான் செய்த காரியத்தை பெருமையாக பேசினார். ஆனால் சரஸ்வதி பரிட்சை எழுதிவிட்டதால் சந்திரகலா எரிச்சலில் இருந்தார். அவர் வாயாலே அவர்கள் தான் இந்த வேலையை செய்தது என்று தமிழுக்கு தெரிய வந்தது. பின் தமிழ் அவர்களை கண்டித்தார். மீண்டும் எங்கள் குடும்பத்தில் தலையிட வேண்டாம் என்று எச்சரித்தார். ஆனால் சந்திரகலா தமிழ் பேசும்போது ஆதியை வீடியோ எடுக்கும்படி செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author