Tamizhum Saraswathiyum Today Episode | 29.11.2021 | Vijaytv
tamizhum Saraswathiyum.29.11.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் நடந்த விஷயங்களை பகிர்ந்துகொண்டார்கள். மகாபலிபுரம் சென்றதில் வசுந்தராவுக்கும் பங்கு உண்டு என்பது வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம் என்று முடிவு எடுத்தார்கள். ஆனால் சரஸ்வதி மண்டபத்தில் நடந்த மயக்க மருந்து விஷயத்தை மனதில் நினைத்து வருந்தினார். தமிழிடம் அந்தை பற்றி எதுவும் சொல்லவும் இல்லை. வசுந்தரா தமிழ் வந்து பேசியதை கேட்டு அவரது அம்மா சந்திரகலாவிடம் கூறினார். அவர் மீண்டும் கோபம் கொண்டார். எதற்காக உண்மையை ஒத்துக்கொண்டாய் என வசுவை திட்டினார். ஆனால் வசுந்தரா இது வரை செய்த தவறே போதும் இனி இந்த பிரச்சனையை பெருசாக்க வேண்டாம் நீங்கள் தலையிட வேண்டாம் என்றும் கூறினார். சொக்கலிங்கம் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பியதும், குடும்பத்தோடு பேச நினைத்தார். கோதை இண்டஸ்ட்ரீஸ் வீட்டு சம்பந்தம் வேண்டாம், நம் வசதிக்கு ஏற்ப ஒரு வரன் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார். இதை கேட்ட சரஸ்வதி அதிர்ச்சி அடைந்தார். அதரக்கு பாட்டி கொந்தளித்தார். ஆனால் சரஸ்வதி தமிழ் வீட்டில் அனைவரும் நல்லவர்கள் என்று கூறினார். அடுததபடியாக என்ன நடந்தது? காணொளியை பார்க்க…