தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் தனக்கு தலை வலி என்று பொய் சொல்லி தமிழையே பிரசன்டேஷன் செய்யுமாறு கூறினார். தமிழ் அதை கேட்டதும் பதறினார். தன்னால் கார்த்திக் அளவுக்கு ஆங்கிலம் பேசவோ அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவோ தன்னால் முடியாது என்று கூறினார். ஆனால் அதை பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தார் கார்த்திக். தன்னால் இந்த வேலையை இப்போது செய்ய முடியாது என்பதை மட்டுமே கூறினார் கார்த்திக். பின் சரஸ்வதிக்கு அழைத்து நடந்ததை கூறினார் தமிழ். அதை கேட்ட சரஸ்வதி மிகவும் நம்பிக்கையாக அவரை ஊக்குவித்தார். உங்களால் முடியும் என்று நம்பிக்கையாக பேசினார். பின் தமிழும் அதன் பின் பிரசன்டேஷன் செய்ய உள்ளே சென்றார். ஆனால் அவரால் எதையுமே தெளிவாக பதிலளித்து பேச முடியவில்லை. ஆனாலும் தமிழில் பேசி ஒரு அளவுக்கு முயற்சித்தார். ஆனால் அதுவும் அவர்களை ஈர்க்கவில்லை. இதனால் இந்த கம்பேனி டீலிங் வேண்டாம் என்று முடிவு செய்தார்கள். பின் இதை தமிழ் கார்த்திகிடம் கூறினார். கார்த்திக் பேசியிருந்தால் கண்டிப்பாக இந்த வேலை நமக்கு கிடைத்து இருக்கும் என்று புலம்பினார். ஆனால் கார்த்திக் தன் மேல் எந்த தப்பும் இல்லை என்பது போல் பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…