Tamizhum Saraswathiyum Today Episode | 30.06.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 30.06.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி தன்னால் இனி படிக்க முடியாதே என்று நினைத்து வருந்தினார். அந்த அனேரம் வசுந்தரா அவரை பார்த்து பேசினார். கோதை இப்படி ஒரு முடிவு எடுத்தது மிகவும் தவறு என்று கூறினார். ஆனால் சரஸ்வதி இது அனைத்துமே தனது ராசி, தான் ஆசை பட்ட எதுவும் தனக்கு கிடைக்காது என்று கூறினார். பின் வசுந்தரா அன்று பூஜை பொருட்களை வாங்க சொன்னதை பற்றி கேட்டார். சரஸ்வதியும் அன்று நடந்ததை கூறினார். பின் வசுந்தரா அவருக்கு இந்த தவரில் பங்கு உள்ளது என்று உணர்ந்தார். தான் கவனிக்காதது தான் இப்போது சரஸ்வதி படிப்பையே நிறுத்தும் அளவுக்கு வந்து விட்டது என்று வருந்தினார். ஆனால் சரஸ்வதி அதை எல்லாம் பெரிது படுத்தவில்லை. கோதை கீழிருந்து சரஸ்வதி மற்றும் வசுந்தராவை அழைத்தார். ஆனால் அவர்களுக்கு எதுவும் கேட்கவில்லை. அதனால் அபியை அனுப்பி பார்க்க சொன்னார். அபியும் அவர்களை அழைத்து வந்தார். வந்ததும் சரஸ்வதி வாருடைய புத்தகங்களை வைத்து வருத்தப்படுவது பற்றி அபி கூறினார். உடனே சரஸ்வதி இடம் நான் முடிவு எடுத்தால் அதை மாற்ற முடியாது. யாரும் இனி படிக்க வேண்டாம். எனக்கு என் மகனின் உயிர் தான் முக்கியம் என்று கடுமையாக கூறினார். ஆனால் வசுந்தரா, அன்று நடந்தது ஒரு சிறு தவறு தான். அதில் என் பங்கும் உள்ளது, இதற்காக படிப்பை நிறுத்த வேண்டாமே என்று கூறினார். ஆனால் அவரை கார்த்திக் அடக்கினார். மேலும் தமிழ் சரஸ்வதி படிப்பை தொடர வேண்டும் என்று கோதை இடம் முறையிட்டு பார்த்தார். ஆனால் கொதி மனம் மாறவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…