Tamizhum Saraswathiyum Today Episode | 30.08.2022 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் மற்றும் நமச்சி இருவரும் மது வீட்டில் இருந்து காலையில் கிளம்பினார்கள். மது விடம் இனி அந்த ரவுடிகள் வந்தால் உடனே அழைக்குமாரு கூறி கிளம்பினார்கள். சந்திரகலா தமிழ் மது வீட்டில் இருந்து கிளம்பும்போது அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்தார். அதை உடனே சரஸ்வதியின் பாட்டிக்கு அனுப்பினார். சரஸ்வதியின் பாட்டி ஏற்கனவே பதட்டத்தில் இருந்தார், தமிழ் அது போல் எதுவும் செய்து இருக்க கூடாது என்று கடவுளிடம் வேண்டினார். ஆனால் இந்த வீடியோவை பார்த்ததும் உடனே பதறி சந்திரகலாவை பார்க்க கிளம்பினார். வீட்டில் யாரிடமும் என்ன விஷயம் என்று சொல்லாமல் கிளம்பினார். அங்கு சந்திரகலா அவர் திட்டப்படி பாட்டி நம்ப ஆரம்பித்து விட்டார் என்று தெரிந்ததும் மேலும் அவரை குழப்பினார். இப்படி தான் தமிழ் அடிக்கடி இங்கு வந்து போவதாக அக்கம் பக்கத்தில் பேசிக்கொள்வதாக பாட்டியிடம் கூறினார். அதை கேட்ட பாட்டி ஆத்திரம் அடைந்தனர். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author