Tamizhum Saraswathiyum Today Episode | 30.11.2021 | Vijaytv
tamizhum Saraswathiyum.30.11.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கார்த்திக்கை அழைத்து அறிவுரை கூறினார். எப்போதும் வசுந்தராவை விட்டு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று கூறினார். வசுந்தரா தன் வீட்டை விட்டு இங்கு வந்திருப்பதால், அவரை மனசு நோகும்படி எதுவும்செய்யாதே என்று கூறினார். கார்த்திக் அனைத்தையும் கேட்டு பின் அதன் படியே செய்வதாக கூறினார். பின் கீதா அங்கு வந்து கார்த்திக் இடம் மகாபலிபுரம் திட்டம் பற்றி போட்டு கொடுத்தார். அதை கேட்டதில் இருந்து மிகுந்த வருத்தம் அடைந்தார் கார்த்திக். ஆனால் யாரிடமும் அதை காட்டிக்கொள்ளவில்லை. கோதை தமிழை பார்த்து வருத்தப்பட்டார். தன் மூத்த மகன் இருக்கும்போது ,இளைய மகனுக்கு திருமணம் சடங்கு சம்பர்தாயம் எல்லாம் நடப்பதை பார்த்து வருந்தினார். அதை நினைத்து கண் கலங்கினார். அதை பார்த்த நடேசன், அவரை சமாதானம் செய்தார். ஆனால் கார்த்திக் ஒரு குழப்பத்தோடு அவரது அறையில் இருந்தார். அனைவரும் ஆசிர்வாதம் செய்து வசுவை அனுப்பி வைத்தனர். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….