Tamizhum Saraswathiyum Today Episode | 30.11.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 30.11.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினியை கேலியும் கிண்டலும் செய்து வீட்டில் அனைவரும் சந்தோசமாக இருந்தார்கள். அதை பார்த்து கோதை மற்றும் நடேசன் இருவரும் மனநிறைவோடு இருந்தார்கள். நம் பிள்ளைகள் இதே போல் சந்தோசமாக ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து ஒத்துமையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் அர்ஜுன் அப்பாவுக்கு நாம் கொடுத்த வாக்கை மீறி நடந்ததால் அவர் இழப்புக்கு நாமும் ஒரு வகையில் காரணம் ஆகி விட்டதாக பேசிக்கொண்டார்கள். ஆனால் நடேசன், அந்த சூழ்நிலையில் வங்கியில் நமக்கு பணம் தரவில்லை. அதனால் தான் அன்று நம் கை மீறி போனது என்று கூறினார். மேலும் இதை பற்றி இனி பேச வேண்டாம், நடந்ததை மாற்ற முடியாது. அதற்கு ஒரு சின்ன கை மாறாக தன அவர் மகனுக்கு வேலை போட்டு கொடுத்து நம் வீட்டு மாப்பிள்ளையாகவும் வந்து இருக்கிறார் என்று பேசிக்கொண்டார்கள். பின் அனைவரும் சேர்ந்து அர்ஜுன் ராகினி இருவருக்கும் வீடு பார்க்க கிளம்பினார்கள். மூன்று வீடு பார்த்ததில் ஒரு வீடை முடிவு செய்துவிடலாம் என்று கூறினார்கள். அர்ஜுன் மட்டும் பெரிதாக ஈடுபாடு இல்லாதது போல் இருந்தார். தை கவனித்த சரஸ்வதி தமிழ் இடம் அதை பற்றி கூறினார். ஆனால் தமிழ் இதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…