Tamizhum Saraswathiyum Today Episode | 30.12.2021 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தன் மகளும் மருமகனும் சந்தோசமாக இருக்கிறார்களா என்று தெரிந்துகொள்ள நினைத்தார். அதனால் கீதாவை அழைத்து வந்து கோதை வீட்டின் முன் நிறுத்தினார். கீதாவை மட்டும் வீட்டுக்குள் சென்று வசுவிடம் விசாரித்து வருமாறு கூறினார். கீதாவும் வேறு வழி இன்றி விசாரிக்க உள்ளே சென்றார். கீதாவும் கோதை நடேசன் என அனைவரையும் சமாளித்து வசுவை பார்த்தார். ஆனால் வசு இவரிடம் முகம் கொடுத்து பேசவில்லை. ஆனாலும் விசாரித்தார். கார்த்திக் இப்போது எப்படி பேசுகிறான்? நீங்கள் இருவரும் சந்தோசமாக இருக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு வசுவும் கார்த்திக் சொல்ல சொன்னது போல் சந்தோசமாக இருப்ப்பது போல் நடித்தார். அதை நம்பி கீதாவும் உடனே கிளம்பினார். கிளம்பும் போது தமிழை சந்திக்கும்படி ஆனது. தமிழ் கீதாவை பார்த்து எரிச்சல் அடைந்தார். மீண்டும் எதற்காக இந்த வீட்டுக்குள் வந்தீர்கள் என கேட்டார். கீதா தான் செய்தது தவறு தான், என்னை மன்னித்து என்று கூறி தப்பித்து வந்தார். ஆனால் கீதா மன்னிப்பு கேட்பதை சந்திரகலா கவனித்தார். எதற்காக தமிழ் உன் மீது கோபம் கொண்டான் என சந்திரகலா கேட்டார். அதற்கு தமிழ் சந்திரகலா இருவருக்கும் சண்டை வரும்படி உள் குத்தளாக பேசி தன்னை காப்பாற்றிக்கொண்டார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author