தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, திருமண கலாட்டாக்கள் நடந்த வண்ணம் இருந்தது. மருதாணி வைத்த கையோடு அனைவரும் சீட்டு எடுத்து அதில் வரும் விஷயத்தை செய்ய வேண்டும் என்று போட்டி நடத்தப்பட்டது. அதில் இன்று பாக்கியலட்சுமி தொடரில் இருந்து வந்த பாக்கியாவிற்கு பரதநாட்டியம் ஆடும்படி வந்தது.அவரும் ஜெனி துணையுடன் ஆடி முடித்தார். பின் ஈஸ்வரி அம்மாவை பாட்டு பாடும்படி செய்தார்கள். அடுத்ததாக நடேசன் ஒரு பாடல் பாடினார். பின் கடைசியாக சந்திரகலா நடனம் ஆட வேண்டும் என்று கூறினார்கள். அவரும் தயக்கத்தோடு ஆடி முடித்தார். பின் அனைவரும் சாப்பிட சென்றார்கள். மருதாணி வைத்து இருந்த சரஸ்வதிக்கு தமிழ் ஊட்டிவிட்டார். அதை பார்த்த அனைவரும் அவர்களை கேலி கிண்டல் செய்தார்கள். பின் மருதாணி இவளோ செவந்து இருக்கிறது என்று பார்க்க அனைவரும் ஆவலாக இருந்தார்கள். சரஸ்வதியின் கை பல மடங்கு சிவந்து இருந்தது. அதை பார்த்த அனைவரும் சந்தோசத்தில் இருந்தார்கள். பின் பாக்கியலட்சுமி குடும்பம் பரிசு கொடுத்துவிட்டு கிளம்பினார்கள்.என்ன பரிசு அளித்தார்கள்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…