தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பாட்டி சந்திரகலாவின் சதியில் மாட்டி மது மீது கோவம் கொண்டார். தமிழையும் சந்தேகப்பட ஆரம்பித்தார். இதனால் கோவத்தில் நேராக மது வேலை செய்யும் இடத்துக்கு சென்றார். அங்கு மதுவை பார்த்து அக்கம் பக்கம் யார் இருக்கிறார் என்று கூட பார்க்காமல் கத்த ஆரம்பித்தார். மது மற்றும் தமிழை சேர்த்து வைத்து அசிங்கமாக பேசினார். மது நடந்தது என்ன என்று புரிய வைக்க முயற்சி செய்தார். ஆனால் பாட்டி அதை கேட்கும் நிலையில் இல்லை. மேலும் மதுவை அசிங்கமாக பேச மதுவுக்கும் கோவம் வந்து அவரும் பேச ஆரம்பித்தார். இதனால் ஆத்திரம் தாங்காமல் அருகில் இருந்த வெலக்கமாரை எடுத்து மதுவை தாக்கினார் பாட்டி. அதே நேரம் தமிழ் வீட்டுக்கு வந்ததும் கோதை அவரை எதற்காக பொய் சொன்னார் என்று கோவம் கொண்டார். சரஸ்வதியை வீட்டில் விட சொன்னது நான்தான் என்று எதற்கு சொல்ல வேண்டும். வீணாக பொய் சொல்லி எதற்கு குடும்பத்தில் மேலும் பிரச்சனைகளை வழக்க வேண்டும் என்று கத்தினார். பின் தமிழ் அதற்காக மன்னிப்பு கேட்டார். உடனே கோதை சரஸ்வதியை அழைத்து வர வேண்டும் என்று கூறினார். வீட்டில் சுமங்கலி பூஜை ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார். உடனே சரஸ்வதியை அழைத்து செல்ல கிளம்பினார் தமிழ். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…