தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சந்திரகலா தன் மகனுக்கு எப்படியாவது ராகினியை திருமணம் செய்து வைக்க நினைத்தார். அதற்கு கோதையை ஒரு இக்கட்டான நிலையில் வைத்து அவரை சம்மதிக்க வைக்கும்படி பேசினார். கோதையும் தன் மகள் தன் பேச்சை தான் கேட்பாள் என்று கூறினார். தன் வளர்ப்பு தவறாக போகாது என் பேச்சை மீரா மாட்டார் என்று கூறினார். ஆனால் தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் இதில் வாழ போவது ராகினி அவளிடம் சம்மதம் கேட்டப்பின் சம்மதம் சொல்லலாமே என்று கூறினார். ஆனால் சந்திரகலா அதையும் தவறாக சித்தரித்து, கோதை பேச்சுக்கு இப்போது மரியாதை இல்லை. அதனால் தான் சரஸ்வதி தடுக்கிறார் என்பது போல் திரித்து பேசி கோதை மனதை மாற்றினார். பின் கோதை நான் சொன்னபடி இந்த திருமணம் நடக்கும் என்று வாக்கு கொடுத்தார். அந்த நேரம் பார்த்து ராகினி வீட்டுக்குள் நுழைந்து கோதை பேசுவதை கேட்டு விட்டார். பின் அனைவரும் சேர்ந்து ராகினி என்ன முடிவு சொல்கிறார் என்று கேட்டார்கள். ஆனால் ராகினி தன் அம்மா கொடுத்த வாக்கு உருதிக்காக தன் காதலை மன்தில் புதைத்து விட்டு ஆதியை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். சந்திர கலா தான் போட்ட திட்டம் நிறைவேறி விட்டது என்று சந்தோசத்தில் இருந்தார். உடனே ஆதி அர்ஜுன் வீட்டுக்கு சென்று தனக்கும் ராகினிக்கும் நிச்சயம் நடக்க போகிறது என்று திமிராக பேசினார். ஆனால் அர்ஜுன் ராகினி என்னை தான் நேசிக்கிறார் என்று உறுதியாக நம்பினார். தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் ராகினிக்கு இதில் விருப்பம் இல்லையோ என்று நினைத்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….