தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதையை சமாதானம் செய்து அவரை சாப்பிட வைத்து குடும்பத்துடன் பேசி மகிழ்கிறார்கள். வசுந்தரா கா தொலைபேசியில் அழைத்து தன் அம்மா திருமண தேதி மற்றும் மண்டபம் அனைத்தும் முடிவு பண்ணிவிட்டதாக கூறினார். திருமண தேதியை கேட்டதும் கோதை சந்தோசமாக வேலைகளை ஆரம்பிக்கலாம் என கூறுகிறார். ஆனால் மண்டபமும் சந்திரகலாவே முடிவு எடுத்தது அவருக்கு உடன்பாடு இல்லை. இந்த விவரம் குடும்பமாக பேசி முடிவு பண்ண வேண்டும் தனியாக எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்று யோசித்தார் கோதை. பின் தமிழிடம் சந்திரகலா வீட்டிற்க்கு சென்று அவரை வீட்டுக்கு அழைத்து வந்து இதை பற்றி பேச வேண்டும் என கூறினார். தமிழும் வசுந்தரா வீட்டிற்கு சென்று நீங்களா முடிவு எடுத்ததில் அம்மாவிற்கு விருப்பம் இல்லை, வீட்டில் வந்து கலந்து பேசி முடிவு எடுக்குமாறு கூறினார். சொக்கலிங்கம் வீட்டில் சரஸ்வதி தான் பார்த்த விஷயத்தை கூறுகிறார் ஆனால் அதை அவர் நம்பவில்லை. பின் தான் எடுத்த வீடியோ ஆதாரத்தை காட்டினார். இப்போதாவது சொக்கு அப்பா நாம்புவாரா? காணொளியை பார்க்க…