தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கோதை சரஸ்வதியின் பாட்டி பேசியதை நினைத்து கோபத்தில் இருந்தார். தமிழ் சரஸ்வதி இருவரும் நம்ப்குடும்பதுக்கு தேவை இல்லாதவர்களோடு எப்படி சந்தித்து பேசுகிறார்கள் என்று கேட்டார். என்னிடம் உண்மையாக இருப்பேன் என்று கூறிய பின் இப்படி ஒரு செயல் செய்கிறார்கள் என்று கொந்தளித்து பேசினார். அப்போது சரஸ்வதி தமிழ் இருவரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். உடனே சரஸ்வதியை கண்டிக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்தார் கோதை. ஆனால் சரஸ்வதி கோதையை பேசவே விடவில்லை. தான் எதார்த்தமாக கோவிலில் பாட்டியை பார்த்ததை பற்றி அவரே கூறினார். இனி என் மாமியார் சொல்லாத வரை அந்த வீட்டில் யாரிடமும் பேச மாட்டேன் என்று கூறியதாக சொன்னார். கோதை மீண்டும் சரஸ்வதி பாட்டி பேசியதை பற்றி பேச ஆரம்பித்தார். ஆனால் சரஸ்வதி அதற்கு இடம் கொடுக்காமல் பேசினார். கோதை வாயை அடைத்தார். தமிழ் வாயடைத்து போனார் சரஸ்வதியின் பேச்சை கேட்டு. பின் சரஸ்வதி இனி நம் உரிமையை இந்த வழியில் தான் வாங்க வேண்டும் என்பதை தமிழுக்கு கூறினார். அடுத்த நாள் காலையில் சரஸ்வதி பரிட்சை ரிசல்ட் வர இருப்பதால் பதட்டமாக இருந்தார். தமிழ் அவருக்கு ஆறுதல் சொன்னார். கார்த்திக் எப்படியும் சரஸ்வதி இதில் தோல்வி அடைந்து தமிழ் இந்த கம்பேனி பொறுப்பு மொத்தமும் தனக்கு வரபோவதாக நினைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…