தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, வசுந்தராவை தன் வீட்டுக்கு அழைத்து வர கோதை வீட்டுக்கு நல்ல நாள் பார்த்து வந்தார் சந்திரகலா. வீட்டில் அனைவருமே நல்ல நேரத்தில் கிளம்பட்டும் என்று கூறினார்கள். ஆனால் வசுந்தரா தனக்கு இந்த வீட்டில் இருப்பதை தான் விரும்புவதாக கூறினார். மேலும் அந்த வீட்டுக்கு சென்றால் வேலை வேலை என்று சொல்லி இருவரும் வெளியே சென்று விடுவார்கள் அதனால் அங்கு போக எனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார். சந்திரகலா என்ன என்னவோ சொல்லி அவர் மனதை மாற்ற முயற்சி செய்தார். ஆனால் வசுந்தரா இங்கு தான் இருப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார். பின் கோதையும் வசுந்தரா ஆசைப்படி இங்கேயே இருக்கட்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….