Tamizhum Saraswathiyum Today Episode | Vijaytv
thamizhum Saraswathiyum. 09.09.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, கார்த்திக் முக்கியமான வேலையில் இருக்கும்போது வசுந்தரா அவரை வீட்டுக்கு அழைத்தார். தனக்கு வேலை இருக்கிறது என்று கூறினாலும் உடனே வந்தே ஆக வேண்டும் என்று கூறினார். இதனால் வேறு வழி இல்லாமல் வீட்டுக்கு கிளம்பினார். வேலைகளை தமிழ் மற்றும் அர்ஜுன் இடம் பார்க்க சொல்லிவிட்டு கிளம்பினார். அதே போல் சற்று நேரத்தில் சரஸ்வதி தமிழுக்கு அழைத்து வீட்டுக்கு வர சொன்னார். ஆனால் கோவமாக பேசுவது போல் நடித்தார். இதனால் தமிழ் பதாட்டம் ஆனார். தான் செய்த தவறு வீட்டில் தெரிந்துவிட்டதோ என்று பயந்து வீட்டுக்கு கிளம்பினார். வசுந்தரா கார்த்திக் வந்ததும் அவருக்கு ஒரு பரிசு கொடுத்தார். அதில் அவரது கர்பம் உறுதியானதை வெளிப்படுத்தினார். பின் ராகினிக்கும் சரஸ்வதி அழைத்து வர வைத்தார். எதற்காக எல்லாரையும் உடனே வர வைக்க வேண்டும் என்று வீட்டில் அனைவரும் குழம்பினார்கள். மேலும் இனிப்பு செய்து வீட்டில் எல்லாருக்கும் கொடுத்தார். கோதைக்கு ஒன்றுமே புரியாமல் நின்றார். பின் வசுந்தரா மற்றும் கார்த்திக் கீழே இறங்கி வந்தார்கள். இனி கோதை அம்மாவுக்கு ஆர்டர் போட ஒரு ஆள் வரப்போவதாக கூறினார். அப்படி யார் என்று கேட்டதும் வசுந்தரா கர்ப்பமாக இருக்கும் விஷயம் வீட்டில் அனைவருக்கும் தெரிய வந்தது. இதனால் வீட்டில் அனைவரும் சந்தோசத்தில் துள்ளி குதித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..