Thamizhum Saraswathiyum Today Episode | 08.11.2021 | Vijaytv
thamizhumsaraswathiyum.08.11.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அருண் சரஸ்வதியை வீட்டிற்க்கு அழைத்துச் செல்ல வருவதாக பாட்டி கூறினார். அருணும் வந்தான். சரஸ்வதியை கூட்டி செல்ல கிளம்பும்போது கோதை தடுத்தார். நாளை முகுர்த்தம் முடியும் வரை இருக்க சொன்னார். ஆனால் அப்பா விட மாட்டார் என அருண் கூற, உடனே அப்பாவிடம் நான் பேசுகிறேன் என்று கூறினார் கோதை. சொக்கலிங்கத்தை அழைத்து சரஸ்வதி முகுர்த்தம் வரை இருக்கட்டுமே,நானே எங்கள் காரில் நாளை அனுப்பி வைக்கிறேன் என்று கூறினார். கோதையின் பேச்சை கேட்ட சொக்கலிங்கம் மறுக்க முடியாத நிலையில் சரி என்று ஒப்புக்கொண்டார். அருண மட்டும் கிளம்பி வீட்டிற்க்கு வருமாறு கூறினார். மேடையில் ஆட்டம் பாட்டம் என்று அனைவரும் குதூகலமாக இருந்தனர். அப்போது வசுந்தரா தன் நகையை பெட்டியில் வைக்க வேண்டும் என்று கூறி சரஸ்வதியிடம் கொடுத்தார். சரஸ்வதியும் அதை போல் பெட்டியில் வைத்துவிட்டு வந்தார். அதை தொடர்ந்து சந்திரகலா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரஸ்வதிக்கு திருட்டு பட்டம் கொடுக்க நினைத்தார். அதற்கு என்ன செய்தார்? காணொளியை பார்க்க…