Thamizhum Saraswathiyum Today Episode | 09.11.2021 | Vijaytv
thamizhumSaraswathiyum.09.11.2021
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதியின் பெட்டியில் வசுந்தரா கொடுத்த நகை உள்ளதா என பார்க்க அவரது பெட்டியை கலா எடுத்து வந்தார். பின் சோதனை செய்யும் போது அதில் நகையும் இருந்ததை பார்த்து கோதை அதிர்ச்சி அடைந்தார். தமிழ் நடந்தது என்ன என்று உணர முடிந்தது. அதனால் நமச்சியுடன் கலந்து பேசி ஒரு திட்டம் போட்டார். தன்னிடம் ஆதாரம் உள்ளதாக கூறினார் நமச்சி.இது சரஸ்வதியை மாட்டி விடுவதற்காக செய்த சதி என்று கூறினார். அந்த நேரத்தில் தமிழ் சந்திரகலாவின் பணிப்பெண்ணை பார்த்து உண்மைகளை தெரிந்து கொண்டார். பின் அனைவர் முன்னிலையிலும் சந்திரகலாவை அவமானப்படுத்த வேண்டாம் என்று எண்ணி, கோதை காதில் ரகசியமாக கூறினார். பின் ஒரு அறையில் வைத்து கோதை சந்திரகலாவிற்கு உரைக்கும்படி பேசி புரிய வைத்தார். சரஸ்வதி மேல் எந்த தப்பும் இல்லை என்று கோதை கூறினார். சரஸ்வதி எங்கள் வீட்டு பெண் என்றும் கூறினார்.அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…