இனி எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி?
Vela Ramamoorthy As Aadhi Gunasekaran In Ethir Neechal Serial Fact Here Idamporul
நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து காலமானதை அடுத்து எதிர்நீச்சல் சீரியலில் அவருக்கு பதில் வேல ராமமூர்த்தியை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கின்றனராம்.
எதிர் நீச்சல் தொடரில் ’ஆதி குணசேகரன்’ என்ற கேரக்டர் மூலம் மிக பிரபலமான நடிகர் மாரிமுத்து திடீர் உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து அவருக்கு பதில் எழுத்தாளர் மற்றும் நடிகரான வேல ராமமூர்த்தி அவர்களை நடிக்க வைக்க எதிர் நீச்சல் சீரியல் குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ மாரிமுத்து என்ற நடிகனுக்கான மாற்று என்பது இல்லை என்றாலும் கூட, வேல ராமமூர்த்தி அந்த கேரக்டரை அவரது பாணியில் திறம்பட செய்வார் என நம்புவோம் “