விஜய் டெலிவிஷனின் பிரபல சீரியலான கிழக்கு வாசல், தொடரை தயாரிப்பு குழு முடித்து விட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரேடான் மீடியா வொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் எம் என் மனோஜ் குமார் அவர்களின் இயக்கத்தில், எஸ் ஏ சந்திரசேகர், ரேஷ்மா முரளிதரன், வெங்கட் ரங்கநாதன் என பலரின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 7, 2023 -யில் இருந்து ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலை, தயாரிப்பு குழு வருகின்ற ஏப்ரல் 19 அன்று கடைசி எபிசோடை ஒளிபரப்பி முடித்து விட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
“ கிட்டதட்ட கிழக்கு வாசல் சீரியல் துவங்கி 150 நாட்கள் கூட ஆகாத நிலையில் அவசரம் அவசரமாக சீரியலை முடிப்பதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை “