எளிய மனிதர்களின் கைகளில் ஹாட் ஸ்டார் இருந்திருந்தால் நானே வென்று இருப்பேன் – விக்ரமன்
Vikraman After Bigg Boss Interview Idamporul
எளிய மனிதர்களின் கைகளில் ஹாட்ஸ்டார் மற்றும் மொபைல்கள் இருந்திருந்தால் நானே பிக்பாஸ் டைட்டிலை வென்று இருப்பேன் என விக்ரமன் கூறி இருப்பது சர்ச்சை ஆகி இருக்கிறது.
மக்களின் ஏக போக ஓட்டுகளின்படி பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டிச் சென்றார் அசீம். ஆனால் தற்போது விக்ரமன் அவர்கள் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியின் போது எளிய மக்களின் கைகளில் ஹாட் ஸ்டார் இருந்திருந்தால் நானே வென்று இருப்பேன் என்று அசீம் வெற்றி குறித்து சர்ச்சை கிளப்பி இருக்கிறார்.
“ தற்போதெல்லாம் எல்லா மக்களின் கைகளிலும் மொபைல் இல்லாமல் இல்லை என்பதை அவர் உணர வேண்டும், மக்களின் ஓட்டுக்களையும் மதிக்க வேண்டும் என்று ரசிகர்களும் விக்ரமனின் இந்த நேர்காணலுக்கு பதில் கொடுத்து வருகின்றனர் “