IPC Section 100 | ‘ஆணோ, பெண்ணோ தன்னை தற்காத்துக் கொள்ள செய்யும் எதிர் தாக்குதல் குற்றமல்ல’

’IPC Section 100’ பிரிவின் படி ஆணோ, பெண்ணோ ஒரு கடினமான சூழலில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள, அந்த சூழலை உருவாக்குபவர் மீது தாக்குதலை நிகழ்த்துவது குற்றமல்ல.

‘IPC Section 100’ பிரிவின் படி, கடத்தல், பாலியல் வன்புணர்விற்கு முற்படுதல், ஆசிட் வீச முயற்சித்தல் போன்ற ஆபத்து நிலையில், ஆணோ, பெண்ணோ தனக்கு ஆபத்து விளைவிக்க முயற்சிப்பவருக்கு எதிராக எதிர் தாக்குதல் தொடுக்கலாம். அந்த எதிர்தாக்குதலில் ஆபத்து விளைவிக்க முற்பட்டவர் காயம் அடைந்தாலோ, மரணித்தாலோ அது சட்டப்படி குற்றம் ஆகாது.

“ இப்படி சில முக்கியமான சட்டங்களை தெரிந்து கொள்வதன் மூலம், எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒரு நல்ல உயிர், தன்னை ஏதாவது ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ள அது வழி வகுக்கும் “

About Author