கோவை கலெக்டருக்கு ‘மாமன்னன்’ டிக்கெட்டை அனுப்பிய பாமக நிர்வாகி, காரணம் என்ன?
கோவை கலெக்டருக்கு, பாமக நிர்வாகி ஒருவர் ‘மாமன்னன்’ டிக்கெட்டை அனுப்பி வைத்து இருக்கிறார், காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.
குறை தீர்க்கும் கூட்டத்திற்கு மணிக்கணக்கில் நின்று ரசீது பெற்று, நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. நீங்கள் மேலானவர்கள் போல மேடையில் அமர்ந்து இருப்பீர்கள், நாங்கள் கீழ் நின்று கொண்டு எங்கள் குறையை சொல்ல வேண்டுமா? மாமன்னன் பார்த்து திருந்துங்கள், என்று கூறி மாமன்னன் பட டிக்கெட்டையும் கோவை கலெக்டருக்கு அனுப்பி வைத்து அதிரடி செய்து இருக்கிறார் பாமக நிர்வாகி ஒருவர்.
“ அரசு அலுவலர் என்பவர்கள் மக்களுக்கு சேவை செய்ய தான், அவர்களை சரிவர நடத்துங்கள், இல்லையெனில் அடுத்த கூட்டத்திற்கு நான் கைகளில் இருக்கையோடு வருவேன் எனவும் அந்த பாமக் நிர்வாகி கலெக்டரை எச்சரித்து இருக்கிறார் “