இன்று முதல் தமிழகம் எங்கும் செயல்பட துவங்குகிறது விஜய் படிப்பகம்!
Vijay Padippagam Starts From Today Idamporul
இன்று காமராஜர் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் எங்கும் விஜய் படிப்பகத்தை, விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம், விஜய் துவங்கி வைத்து இருக்கிறார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஏழை எளிய மாணவர்களுக்காக, மாலை நேர விஜய் படிப்பகத்தை, விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து இருக்கிறார் நடிகர் விஜய். அடுத்தடுத்து அதிரடியான திட்டங்களின் மூலம் மக்களை கவர துவங்கி இருக்கிறார் நடிகர் விஜய்.
ஏசி, நல்ல வசதியான சேர்கள், நவீன போர்டுகள், லேப்டாப் என்று நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டிருக்கும் தளபதி விஜய் படிப்பகம் மாணவர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. நிச்சயம் சிறப்பாக செயல்பட்டால் பலரது மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும்.
” அரசு செய்ய வேண்டிய அனைத்து உதவிகளையும் விஜய் களத்தில் இறங்கி செய்ய முனைந்திருப்பது நடிகர் விஜய் அவர்களின் அரசியல் களத்தை நிச்சயமாக உறுதி செய்து இருக்கிறது “