அஷ்வின் குமார் நடித்திருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் இணையத்தில் வெளியானது!
Ashwin Kumar Enna Solla Pogirai Teaser Released In Net 1
’குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் குமார் நடித்திருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ திரைப்படத்தின் டீசர் இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
’ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ஹரிகரன் அவர்களின் இயக்கத்தில், ’குக் வித் கோமாளி’ புகழ் அஷ்வின் குமார் மற்றும் பலர் நடித்து இருக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் டீசர் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
“ என்ன தான் சொன்னாலும் அஷ்வின் குமார் தனக்கென்று ஒரு கிரேஸ் மற்றும் ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார். அஷ்வின் என்ன செய்தாலும் அந்த கூட்டம் அவரை ட்ரென்டிங்கில் ஏற்றி விடுகிறது “