பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 910 பேர் கொரோனோவுக்கு பலி
அமெரிக்காவிற்கு அடுத்து கொரோனோ அதிகம் பாதித்த நாடாக கருதப்படுவது பிரேசில். நேற்றைய ஒரு நாளில் மட்டும் பிரேசிலில் கொரோனோ தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 910 ஆக உள்ளது.
சர்வதேச நாடுகளில் மீண்டும் அதிகரிக்கின்ற கொரோனோ தொற்று மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பிரேசிலில் புதிதாக தொற்று பாதித்தவர்கள் 37,582 ஆகவும், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 910 ஆகவும் உள்ளது. இதன் மூலம் பிரேசிலில் மொத்த பலி எண்ணிக்கை 5,56,370 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் பிரேசில் அடுத்த கொரோனோ அலையை எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“ Stay Safe, Corono Is Still Alive “