பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுன் கைது!
தான் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலின மக்களை சாடும் வகையில் பேசியிருந்த மீராமிதுன்,சில நாட்களாகவே பதுங்கியிருந்த நிலையில் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சைகளில் சிக்கி கொள்ளும் மீரா மிதுன் சில வாரங்களுக்கு முன் தான் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பட்டியலின மக்களை மிகவும் அவதூறாக பேசி இருந்தார். இது குறித்து சென்னை எம்.கே.பி.நகர் காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கு பதிவானது தெரிந்ததுமே தான் தங்கி இருந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு பதுங்கலானார் மீராமிதுன். தொடர்ந்து தேடி வந்த தமிழக காவல் துறையினர் கேரளாவில் அவர் பதுங்கி இருந்தததை அறிந்து சுற்றி வளைத்து பிடித்தனர்.
சமூக வலைதளம் தானே! என்ன பேசினாலும் யார் நம்மை என்ன செய்ய போகிறார்கள் என்று மீரா மிதுன் போன்ற இன்னும் சில செலிபிரிட்டிகள் தொடர்ந்து வஞ்சக வார்த்தைகளோடு தனிநபர் தாக்குதல் புரிந்து வருகின்றனர். அவர்களையும் இனம் கண்டு இது போல கடுமையான பிரிவுகளின் கீழ் கைது செய்து தக்க தண்டனை வழங்க வேண்டும்.
“ ரசிகர்கள் சண்டை, தனிநபர் தாக்குதல், சாதியிய பதிவுகள், மத இழுக்கு பதிவுகள் என்று சமூக வலைதளங்களில் இன்று பெரும்பாலும் நிறைந்திருப்பது டாக்சிக் பதிவுகளாகவே இருக்கிறது. நம்மை என்ன செய்துவிட போகிறார்கள் என்ற தைரியமே பெரும்பாலும் இவர்களை இப்படி பதிவிட தூண்டுகிறது. இத்தகைய கைது நடவடிக்கைகள் அவர்களின் அந்த குருட்டு தைரியத்தை உடைத்து எறியும். தொடர்ந்து நடவடிக்கைகள் தொடரட்டும் “