கொரோனாவை அடுத்து மிரட்டும் பன்றி மற்றும் பறவை காய்ச்சல்!

Swine Flu Spreading Fast In Kerala Idamporul

இன்னும் கொரோனாவே ஓயாத நிலையில் அடுத்ததாக பன்றி மற்றும் பறவை காய்ச்சல் தேசத்தை தொற்றிக் கொண்டு இருக்கிறது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் ஒரு தனியார் பண்ணையில் பறவை காய்ச்சல் பரவியதை அடுத்து அங்கு இருந்த 3600-க்கும் மேற்பட்ட பறவைகள் கொல்லப்பட்டன. கேரளாவை அடுத்து அருகில் இருக்கும் தமிழகத்திலும் இது பரவ வாய்ப்பு இருப்பதால் தமிழக எல்லையில் பாதுகாப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. “ மனிதர்களுக்கு அவ்வளவு எளிதில் பரவாது என்றாலும் உருமாறிய வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகளை … Read more

மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை கைப்பற்றினார் அமெரிக்காவின் போனி கேப்ரியல்!

Miss Universe 2023 R Bonney Gabriel Idamporul

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் பட்டத்தை வென்றிருக்கிறார் அமெரிக்க அழகி போனி கேப்ரியல். 71 ஆவது மிஸ் யுனிவர்ஸ்சை போட்டி அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்றது. 86-க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் திறன் மற்றும் நேர்த்தி அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த அழகியான ஆர் போனி கேப்ரியல் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை தட்டிச் சென்றார். “ இந்தியாவை சேர்ந்த திவிதா இந்த போட்டியில் 16 … Read more

அஜித் குமார் அவர்களை புகழ்ந்து தள்ளிய துணிவு படத்தின் சக நடிகை மஞ்சு வாரியர்!

Manju Warrier Thanking To AJith Kumar Idamporul

’துணிவு’ திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் அவர்களுடன் இணைந்து நடித்து இருந்த மஞ்சு வாரியர், அஜித் அவர்களை புகழ்ந்து தள்ளி இருக்கிறார். ’இதுவரை எந்த நடிகருடனும் கிடைக்காத ஒரு கம்போர்ட்னஸ் நடிகர் அஜித் அவர்களிடம் எனக்கு கிடைத்தது, அவர் அவராகவே என்னிடம் இருந்தார், நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டோம்’ என நெகிழ்வாக நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு புகழாரம் சூட்டி இருக்கிறார் துணிவு படத்தின் சகநடிகை மஞ்சு வாரியர். “ நடிகர் அஜித் அவர்களை ஒரு விஷயத்தில் பாராட்டியே ஆக … Read more

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘கள்வன்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது!

GV Prakash In Kalvan Teaser Is Out Idamporul

ஜி.வி.பிரகாஷ் அவர்கள் நடிக்கும் ‘கள்வன்’ திரைப்படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. தயாரிப்பாளர் தில்லி பாபு அவர்களின் தயாரிப்பில், இயக்குநர் பி.வி.சங்கர் அவர்களின் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், பாரதி ராஜா, இவானா, ஞான சம்பந்தம், தீனா, வினோத் முன்னா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கள்வன்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. “ டீசர் வெறியாக இருக்கிறது. அதற்கேற்ப கதைக்களம் அமைத்து இருந்தால் ஜி.வி.பிரகாஷ் ஹிட் வரிசையில் இந்த படம் இணைய அதிக … Read more

2030-ற்குள் இந்தியாவில் ரயில்கள் 100 சதவிகிதம் பசுமை ரயில்களாக மாற்றப்படும் – இந்தியன் ரயில்வே

100 Percent Non Emission Trains In India Before 2030

2030-ற்குள் இந்தியன் ரயில்வேயில் செயல்படும் ரயில்கள் 100 சதவிகிதம் பசுமை ரயில்களாக மாற்றப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்து இருக்கிறது. பசுமை இல்ல வாயுக்களை வெளியிடும் ரயில்கள் 2030-ற்குள் முற்றிலுமாக நீக்கப்பட்டு இந்தியன் ரயில்வே முழுக்க முழுக்க பசுமை ரயில்களை இயக்கும் நிறுவனமாக 100 சதவிகிதம் மாறும் என இந்தியன் ரயில்வே ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 2014-யை ஒப்பிடும் போது தற்போது மின்மயமாக்கல் 10 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. “ ரயில்களை மாற்றுவது போல தனிநபர்கள் … Read more

பெரும் நட்சத்திர வீரர்கள் இல்லாத இலங்கை அணியுடன் கூட போராடி வெல்வது தான் இந்திய அணியா?

Confidence In Indian Team Is Low Idamporul

நட்சத்திர வீரர்கள் பெரிதாய் இல்லாத இலங்கை அணியுடன் கூட தற்போதைய இந்திய அணி போராடி தான் ஜெயிக்கிறது என்பதால் இந்திய அணி மீதான உலககோப்பை நம்பிக்கை கலைந்து வருகிறது. பெரும் அனுபவங்களும், நட்சத்திர வீரர்களும் அல்லாத இலங்கை அணியுடன் கூட தற்போதைய இந்திய அணி போராடி தான் ஜெயிக்க வேண்டிய நிலைமை இருந்தால், நாளைய ஒரு நாள் உலககோப்பை தொடரை இந்த இந்திய அணி எப்படி எதிர்கொள்ளும் என ரசிகர்கள் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். … Read more

தொடர்ந்து தமிழகத்தில் பெருகிவரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்!

Online Gambling Sucide Increasing In TN Idamporul

தமிழகத்தில் தொடர்ந்து பல ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் பதிவாகி வருவது நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. நெல்லை டிரைவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 15 லட்சத்தை இழந்ததால் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து இது பலமுறை நிகழ்ந்துவருகிறது. நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களுமென யார் சூதாட்டத்தை ஊக்குவித்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்கினாலே இது பாதி குறைந்துவிடும். “ பொதுவாக மக்கள் மத்தியில் சூதாட்டம் பிரபலமாகுவதே விளம்பரங்கள் மூலம் தான் அதை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு … Read more

700-க்கும் மேற்பட்ட விமானங்கள் முடக்கம், ஹேக் செய்யப்பட்டதா அமெரிக்க விமான சேவை மையம்?

Does US Airport Authority System Hacked Idamporul

அமெரிக்க விமான சேவை மையம் முடங்கியதால் கிட்ட தட்ட 700-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் அதன் சேவைகள் முடங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க விமான சேவை மையம் முழுமையாக முடங்கியதால் கிட்டதட்ட 700-க்கும் மேற்பட்ட விமான சேவை நிறுத்தப்பட்டது. ஒரு பக்கம் ஹேக்கர்ஸ் விமான சேவை மையத்தை முடக்கியதாக கூறப்படுகிறது. ஆனால் வெள்ளை மாளிகை அறிக்கையோ இது வெறும் தொழில்நுட்ப கோளாறு தான் என கருத்து தெரிவித்து இருக்கிறது. “ ஒரு சிறிய தொழில்நுட்பம் முடங்கினால் … Read more

மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் பிக்பாஸ் நாயகி தனலெட்சுமி!

Dhanalakshmi Again In To Bigg Boss House Idamporul

பிக்பாஸ் சீசன் 6 இல்லத்திற்குள் மீண்டும் அதிரடியாக நுழைந்து இருக்கிறார் தனலெட்சுமி. எந்த வித பெரிய பின்புலமும் இல்லாமல் கிட்ட தட்ட 5 வருடங்கள் போராடி பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்து இருந்திருந்தார் தனலெட்சுமி. பெரும் பங்களிப்பை கொடுத்து இருந்தாலும் ஒருகட்டத்தில் வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறார். ” கோபம், குழந்தைதனம் இருந்தாலும் கூட பெரும்பாலான இடங்களில் அவரது வயதை தாண்டிய மெச்சூரிட்டி வெளிப்பட்டது. இறுதிவரை வருவார் என்றே அனைவரும் … Read more

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று துவங்குகிறது!

IND VS SL 2nd ODI Starts Today Idamporul

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இந்தியா வென்று முன்னிலை வகிக்கும் நிலையில், இன்று ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டாவது போட்டி துவங்க இருக்கிறது. மதியம் 1:30 மணியளவில் துவங்க இருக்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ஸ் சேனலில் நேரலையில் ஒளிபரப்பாகும். “ இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி … Read more