ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணி ஆகிறார் – பி வி சிந்து

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் பேட்மிண்டன் பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியாவின் பி வி சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவை  21-13,21-15 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி இந்தியாவிற்கு மற்றுமொரு பதக்கத்தை பெற்று தந்திருக்கிறார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பி வி சிந்து அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீராங்கணையோடு போட்டி போட்டு தோற்றிருந்த நிலையில் இன்று வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் சீனாவின் ஹி பிங் ஜியாவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே அதிரடியாக … Read more

வட்டு எறிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற கமல் பீரித் கவுர் – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் வட்டு எறிதல் பிரிவில் 64 மீ தூரத்திற்கு எறிந்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் பஞ்சாப்பின் இளம் சிங்கம் கமல் பீரித் கவுர். வயது 25, அம்மா அப்பா இருவரும் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள். முதல் ஒலிம்பிக், இடம்பெற்றது குரூப் பி-யில் அவரைச்சுற்றி இருப்பவர்களெல்லாம் உலகின் நம்பர் 1, நம்பர் 4, நம்பர் 5 வீராங்கனைகள், ஆயினும் பயமில்லை இந்த இளங்கன்றுக்கு. குருப் ஏ, குரூப் பி சேர்த்து ஒட்டு மொத்த … Read more

காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி குரூப் ஏ பிரிவில் அயர்லாந்தை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தைப்பிடித்து இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஐந்து லீக் ஆட்டங்களை ஆடிய இந்திய மகளிர் ஹாக்கி அணி அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகளிடம்  வென்று இரண்டு வெற்றிகளை மட்டுமே தன் வசம் வைத்திருந்தது. இதனால் நான்காவது இடத்திற்கு இந்தியாவிற்கும் அயர்லாந்து அணிக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் பிரிவு ஏ வின் கடைசி லீக் ஆட்டத்தில் … Read more

இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையறையின்றி விலகியது ஏன்?

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் ஆல்ரவுண்டராக அறியப்படும் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து காலவரையறையற்ற இடைவெளி எடுத்துக்கொள்ளப்போவதாக திடீரென்று அறிவித்துள்ளார். இங்கிலாந்து கடந்த உலககோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இந்த பென் ஸ்டோக்ஸ். ஆல்ரவுண்டராக அறியப்படும் இவர் தனக்கென்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் நிலையில் திடீரென்று சர்வதேச போட்டிகளிலிருந்து காலவரையறை இன்றி விலகுவதாக அறிவித்திருப்பது ரசிகர்களுக்கும் இங்கிலாந்து அணிக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மிடில் ஆர்டரில் ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கிலும் அவ்வப்போது தனது … Read more

அரையிறுதியில் பி வி சிந்து தோல்வி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதிப்போட்டியில் பி வி சிந்து, சீன தைபேவைச் சேர்ந்த தாய் சு யிங்கிடம் தோல்வியுற்றார். மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரையிறுதிபோட்டியில் இந்தியாவின் பி வி சிந்து, உலகின் முதல் நிலை வீராங்கனையான சீன தைபேயின் தாய் சு யிங்கை எதிர் கொண்டார். அதிரடியாக விளையாடிய தாய் சு யிங் 21-18, 21-12 என்ற நேர் செட்களில் சிந்துவை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதற்கு முன்பு இருவரும் நேருக்கு … Read more

காலிறுதிக்கு தகுதி பெறுமா இந்திய மகளிர் ஹாக்கி அணி? – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-3 என்ற கணக்கில் போராடி வென்றது. வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்திய வீராங்கனை வந்தனா ஹாட்ரிக்கோல்கள் அடித்து இந்தியாவை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 4-3 என்ற கணக்கில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை … Read more

கோல்டன் ஸ்லாமை தவற விட்ட ஜோகோவிச் – ஒலிம்பிக் 2020

உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்விடம் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றுள்ளார். கோல்டன் ஸ்லாமை வெல்லுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்விடம் 1-6,6-3,6-1 என்ற செட் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியுற்றார். ஒரு வருடத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம்கள் மற்றும் கோல்டன் கிராண்ட்ஸ்லாம் (ஒலிம்பிக் தங்கம்) என்ற சாதனையை 32 வருடங்களுக்கு முன்பு புரிந்த ஜெர்மனி வீராங்கனை ஸ்டெபி கிராப்பின் சாதனையை இந்த ஒலிம்பிக்கில் … Read more

முதல் ஒலிம்பிக்கிலேயே இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த லோவ்லினா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை 64-69 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்திய வீராங்கனை லோவ்லினா, சீன தைபேயின் நின்-சின் சென்-ஐ 4-1 என்ற கணக்கில் எளிதாக வென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மகளிர் குத்துச்சண்டை 64-69 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் லோவ்லினாவும், சீன தைபேயின் நின்-சின் சென்-ஐயும் மோதினர். தொடக்கம் முதலே தனது முழு ஆக்ரோசத்தையும் காட்டிய லோவ்லினா 30-27,29-28,28-29,30-27,30-27 என்ற புள்ளிக்கணக்கில் நின்-சின் சென்-ஐ வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். 23 வயதே ஆன … Read more

அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் பிரிவின் காலிறுதியில் ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்ட இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அவரை நேர் செட்களில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு மற்றுமொறு பதக்கத்தை உறுதி செய்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் காலிறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து ஜப்பானின் அகனே யமகுச்சியை எதிர்கொண்டார். தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-13,22-20 என்ற நேர் செட்கணக்கில் யமகுச்சியை எளிதாக வீழ்த்தினார். இதன் மூலம் அரையிறுதிக்கு … Read more

ஹசரங்காவின் மேஜிக்கல் சுழலில் வீழ்ந்தது இந்திய அணி…!

இந்தியாவுடனான மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று தங்களது தொடர்ச்சியான ஐந்து T20 சீரிஸ் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சணக்கா தலைமையிலான இளம் இலங்கை கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட தவான் தலைமையிலான இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று T20 போட்டிகளில் விளையாடியது. ஒரு நாள் தொடரை ஏற்கனவே வென்றிருந்த இந்திய அணி T20 தொடரை 1-2 என்ற கணக்கில் நழுவ விட்டது. தொடரின் … Read more