வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் கிரேட் பிரிட்டனிடம் தோல்வியுற்றது இந்திய மகளிர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் ஹாக்கி பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி, கிரேட் பிரிட்டனிடம் 3-4 என்ற புள்ளி கணக்கில் போராடி தோல்வியுற்றது. மகளிர் ஹாக்கி வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி, கிரேட் பிரிட்டனை எதிர் கொண்டது. இரு அணி வீரர்களும் அனல் பறக்க களத்தில் நின்றதால் ஆட்டம் கடைசி வரை சூடு பிடித்தது. பதக்கத்திற்காக கடைசி வரை களத்தில் போராடிய இந்திய அணி இறுதியில் 3-4 என்ற கணக்கில் … Read more

மல்யுத்தம்: வெள்ளிப்பதக்கம் வென்றார் ரவிக்குமார் தாஹியா- டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா 4-7 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் சாவுர் யுகுயேவிடம் போராடி தோற்றார். தங்கம் எட்டவில்லை எனினும் பதக்க பட்டியலில் இந்தியாவிற்கு மற்றும் ஒரு வெள்ளியை பெற்று தந்திருக்கிறார் ரவிக்குமார் தாஹியா. அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவ்வை அதிரடியாக தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். ரவிக்குமார் தாஹியா. தங்கம் வெல்வார் என்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இறுதிப்போட்டியில் 4-7 என்ற கணக்கில் … Read more

ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு ஹாக்கியில் பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஹாக்கி பிரிவில் வெண்கலத்திற்கான போட்டியில் இந்திய அணியும் ஜெர்மனியும் மோதிய நிலையில், 5-4 என்ற கணக்கில் வென்று வெண்கலத்தை தன்வசப்படுத்திக்கொண்டது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. விறுவிறுப்பாக நடைபெற்ற வெண்கலத்திற்கான ஆட்டத்தின் முதல் இரண்டு பாதியில் 3-1 என்ற கணக்கில் ஜெர்மனி முன்னிலையில் இருந்த போதும் அடுத்து ஆட்டத்தில் அதிரடி காட்டிய இந்திய அணி 3-5 என்று முன்னிலை பெற்றது. இறுதியில் 4-5 என்ற கணக்கில் ஜெர்மனியை வென்று ஒலிம்பிக்கில் 41 … Read more

மல்யுத்தம்: சில்வரை உறுதி செய்தார் ரவிக்குமார் தாஹியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா, கஜகஸ்தானின் நூரிஸ்லாம் சனாயேவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 23 வயதே ஆன ரவிக்குமார் தாஹியா முதல் பாதியில் பின் தங்கியிருந்த போதும் அதற்கு பின் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை தன் பக்கம் திருப்பினார். இதன் மூலம் இந்தியாவிற்கு பதக்க பட்டியலில் சில்வரை உறுதி செய்திருக்கிறார் ரவிக்குமார் தாஹியா. இதற்கு முன்னர் 2012 லண்டன் ஒலிம்பிக்சில் சுஷில் குமார் மல்யுத்தத்தில் … Read more

ஈட்டி எறிதல்: முதல் எறிதலிலேயே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற நீராஜ் சோப்ரா- டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் தனது முதல் எறிதலிலேயே 86.65 மீட்டர் எறிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார் நீராஜ் சோப்ரா. முன்னால் தங்க பதக்க வெற்றியாளரும், உலகின் தலை சிறந்த வீரருமான ஜோஹன்னஸ் வெட்டரே தனது மூன்றாவது எறிதலில் தான் தகுதி புள்ளியை பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் போது, 23 வயதே ஆன இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீராஜ் சோப்ரா, தனது முதல் எறிதலிலேயே 86.65 மீட்டர் எறிந்து இறுதிப்போட்டிக்கு … Read more

மகளிர் குத்துச்சண்டை: வெண்கலம் வென்றார் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெயின்

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா துருக்கியின் புஷானெஸ் சுர்மெனலியிடம் தோற்ற நிலையில் தற்போது வெண்கலப்பதக்கத்தை பெறுகிறார். மகளிர் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் முதல் அரையிறுதியில் இந்தியாவில் லவ்லினா போர்கோஹெயின் துருக்கியின் புஷானெஸ் சுர்மெனலியை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய புஷானெஸ், லவ்லினாவிற்கு ஒரு புள்ளியைக்கூட விட்டுக்கொடுக்காமல் 5-0 என்ற கணக்கில் ஆக்ரோஷமாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் தோற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லையெனினும் வெண்கலப்பதக்கத்தை வென்று இந்திய … Read more

மல்யுத்தம்: அரையிறுதிக்கு முன்னேறிய ரவிக்குமார் மற்றும் தீபக் புனியா – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மல்யுத்தம் பிரிவில் ரவிக்குமார் தாஹியா மற்றும் தீபக் புனியா அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு மற்றுமொரு பதக்க நம்பிக்கையை பெற்றுத்தந்திருக்கின்றனர். மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா பல்கேரியாவின் வான்குளோவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே களத்தில் அதிரடி காட்டிய ரவிக்குமார் 14-4 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வான்குளோவை வீழ்த்தி அரையிறுதிக்குள் முன்னேறினார். மேலும் அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவ்வை எதிர்கொள்கிறார் இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியா. மல்யுத்தம் 86 … Read more

வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியை எதிர்கொள்கிறது இந்திய ஆடவர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஹாக்கி பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் ஜெர்மனியும் மோதிக்கொள்கின்றன. முதல் அரையிறுதியில் பெல்ஜியத்திடம் 5-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தோற்றிருந்த நிலையில் தற்போது வெண்கலத்திற்கான போட்டியில் ஆகஸ்ட் 5 அன்று ஜெர்மனியை எதிர் கொள்கிறது. அதே நாளில் தங்க பதக்கத்திற்கான போட்டியில் உலக ஹாக்கி தர வரிசையில் முதல் இரண்டு இடங்களை பிடித்திருக்கும் அணிகளான ஆஸ்திரேலியாவும், பெல்ஜியமும் மோதிக்கொள்கின்றன. எதுவாகினும் … Read more

ஆஸ்திரேலியாவை வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 மகளிர் ஹாக்கி பிரிவு காலிறுதியில் மூன்று முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்குள் கம்பீரமாய் நுழைந்திருக்கிறது நம் இந்திய மகளிர் ஹாக்கி அணி. Pool A-வில் நான்காவது இடத்தை பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்த இந்திய மகளிர் ஹாக்கி அணி, அரையிறுதிக்கு தகுதி பெற இதுவரை தோல்வியையே அடையாது Pool B-யில் முதல் நிலையில் இருக்கும் பலம் வாய்ந்த அணியான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டாக வேண்டும் என்ற … Read more

கிரேட் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய ஆடவர் ஹாக்கி அணி – டோக்கியோ ஒலிம்பிக் 2020

டோக்கியோ ஒலிம்பிக் 2020 ஆடவர் ஹாக்கி பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆடவர் ஹாக்கி பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கிரேட் பிரிட்டனை எதிர் கொண்டது இந்திய ஆடவர் ஹாக்கி அணி. எரியும் நெருப்பு மனிதர்களை போலவே களத்தில் அனலாய் ஆடிய இந்திய வீரர்களுக்கு கிரேட் பிரிட்டன் வீரர்களால்  சற்றும் ஈடு கொடுக்க முடியவில்லை. இறுதியில் 3-1 … Read more