நடிகர் அஜித் அவர்களின் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் அப்டேட் வெளியாகி இருக்கிறது!
Thunivu Trailer Update Idamporul
நடிகர் அஜித் மற்றும் ஹெச். வினோத் இணையும் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் தேதி நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கிடைத்து இருக்கிறது.
நடிகர் அஜித் மற்றும் ஹெச். வினோத் அவர்கள் மூன்றாவது முறையாக இணையும் ‘துணிவு’ திரைப்படத்தின் ட்ரெயிலர் வரும் டிசம்பர் 31 அன்று வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்து இருக்கிறது. புரோமோசனுக்காக உலகின் உயர்ந்த புல்டிங்கான புர்ஜ் ஃகாலிபாவில் ட்ரெயிலரை படக்குழு ஒளிபரப்ப திட்டமிட்டு இருக்கிறதாம்.
“ இனி வரிசையாக ரசிகர்களுக்கு ட்ரீட் தான் போல, ஒரு பக்கம் வாரிசு படக்குழு என்ன செய்கிறதோ அதை விட ஒரு படி உயர்த்தி செய்ய வேண்டும் என்று துணிவு படக்குழுவும் புரோமோசன் களத்தில் இறங்கி அடிக்கிறது “