பிரபல கோலிவுட் நடிகராக அறியப்படும் டேனியல் பாலாஜி அவர்கள் உடல் நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பைரவா, வட சென்னை, பிகில் உள்ளிட்ட படங்களில் வில்லனாக மிரட்டிய நடிகர் டேனியல் பாலாஜி திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலியினால் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு வயது நாற்பத்து எட்டே ஆகிறது என்பது வேதனைக்குரியது.
“ அவரது மறைவிற்கு கோலிவுட் ரசிகர்களும், கோலிவுட் பிரபலங்களும் தங்களது இரங்கல்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர் “