நடிகர் மகேஷ் பாபு அவர்களின் தந்தை கிருஷ்ணா உடல்நல குறைவால் உயிரிழந்தார்!
Actor Mahesh Babus Father Krishna Passed Away
நடிகர் மகேஷ் பாபு அவர்களின் தந்தை மற்றும் முன்னாள் டோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணா (80) அவர்கள் உடல்நல குறைவால் காலமானார்.
முன்னாள் தெலுங்கு சினிமா உலகின் சூப்பர் ஸ்டார் மற்றும் நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையான கிருஷ்ணா (80) வயது முதிர்வு மற்றும் உடல் நல குறைவால் காலமானார். சமீபத்தில் தான் நடிகர் மகேஷ் பாபு அவர்கள் அவரின் தாயாரை இழந்து இருந்தார். தற்போது தந்தையையும் இழந்து இருப்பது அவரையும் அவரது குடும்பத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
“ அன்னாரது குடும்பத்திற்கு பல தரப்பட்ட ரசிகர்களும், பிரபலங்களும் நேராகவும், சமூக வலைதளங்களின் மூலமாகவும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர் “