நடிகர் லக்‌சுமி நாராயணன் சேஷு உடல்நலக்குறைவால் காலமானார்!

Actor Seshu Passed Away Due To Ill Health Idamporul

Actor Seshu Passed Away Due To Ill Health Idamporul

பிரபல காமெடி நடிகர் லக்சுமி நாராயணன் சேஷு உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.

நடிகர் லக்சுமி நாராயணன் சேஷு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கொஞ்சம் ஓரளவிற்கு குணமாகி ஒரிரு நாட்களுக்கு முன்பு அவர் வீடு திரும்பிய நிலையில், அவருக்கு பொருத்தப்பட்டு இருந்த வெண்டிலேட்டர் அகற்றப்பட்டதும் அவரது உயிர் பிரிந்து இருக்கிறது.

லொள்ளு சபா மூலம் பிரபலமான லக்சுமி நாராயணன் சேஷு அவர்களுக்கு, நடிகர் சந்தானம் அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வந்தார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்து இருந்த வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் கூட சேஷு ஒரு கேரக்டரில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“ சேஷு அவர்களின் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் பலரும் தங்களது இரங்கல்களை நேரடியாகவும் சமூகவலைதளங்களின் மூலமாகவும் தெரிவித்து வருகின்றனர் “

About Author