நகைச்சுவை நடிகர் சிவ நாராயண மூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார்!
Actor Shiva Narayana Murthy Passed Away
நகைச்சுவை நடிகர் சிவ நாராயண மூர்த்தி திடீர் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.
பெரும்பாலும் நகைச்சுவை கதாபாத்திரங்களில், நடிகர் வடிவேலு மற்றும் விவேக் அவர்களுடன் இணைந்து பணியாற்றி பிரபலமான சிவ நாராயண மூர்த்தி(68) நேற்று தீடீர் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். அவருக்கு நடிகர்களும் ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
“ வடிவேலுவுடன் சிவ நாராயண மூர்த்தி அவர்கள் நடித்த அந்த கிட்னி காமெடியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இடம்பொருள் சார்பாக பிரார்த்திக்கிறோம் “