வெற்றிமாறனை தொடர்ந்து, இயக்குநர் அமீருடன் இணைகிறார் நடிகர் பரோட்டா சூரி!
Actor Soori Join Hands With Director Ameer
ஏற்கனவே வெற்றிமாறன் திரைப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கும் நடிகர் சூரி, தற்போது அமீரின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.
இயக்குநர் அமீர் இயக்கத்தில், வெற்றிமாறன் மற்றும் தங்கம் அவர்கள் உருவாக்கிய கதையில், ’இறைவன் மிகப் பெரியவன்’ என்னும் படத்தில் நடிகர் சூரி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்திலும் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ வெற்றிமாறன், அமீர் என்று ராவான டைரக்டர்களுடன் ஹீரோவாக சூரி களம் இறங்கி இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும்ம் மகிழ்ச்சியையும் இணைந்து கொடுத்து இருக்கிறது “