இயக்குநர் மற்றும் நடிகரான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் காலமானார்!
Actor And Director Pratap Pothan Passed Away
பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான பிரதாப் போதன் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் மற்றும் இயக்குநரான பிரதாப் போதன் உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 69. தமிழில் படிக்காதவன், ஆயிரத்தில் ஒருவன் கடைசியாக விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.
“ காலம் யாரையும் விட்டு வைப்பதில்லை. அவன் எந்த உயரம் சென்றாலும், என்றாவது ஒரு நாள் மண்ணில் தாழ்ந்து தான் ஆக வேண்டும் என்பது விதி. ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் “