ரஜினி, சூர்யா உள்ளிட்ட பிரபலங்களின் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார்!

Famous Producer VA Durai Passed Away Idamporul

Famous Producer VA Durai Passed Away Idamporul

நடிகர் ரஜினி, சத்யராஜ், சூர்யா உள்ளிட்டோர்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி ஏ துரை காலமானார்.

கஜேந்திரா, பிதாமகன், என்னம்மா கண்ணு, பாபா என்று பல்வேறு பிரபலங்களின் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் வி ஏ துரை (59) உடல்நலக்குறைவால் காலமானார். சில நாட்களாகவே நீரிழிவு நோயால் மிகவும் அவதிப்பட்டு பலரிடமும் உதவி கோரி வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி காலமாகி இருக்கிறார்.

“ ஒரு காலத்தில் கோடிகள் கோடிகளாக படங்களுக்கு செலவிட்டவர் தற்போது நிர்க்கதியாக உயிரை விட்டு இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது “

About Author