இளையராஜாவின் மகளான பாவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார்!
Ilaiyaraaja Daughter Bhavatharini Died Due To Some Health Issue Idamporul
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாவதாரிணி உடல்நலக்குறைவால் காலமாகி இருக்கிறார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளான பாவதாரிணி (47) புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நோயின் தன்மை தீவிரமாகி இலங்கையில் காலமாகி இருக்கிறார். பின்னனி பாடகியாக அறியப்படும் பாவதாரிணி இசையமைப்பாளராகவும் ஒரு சில படங்களில் பணிபுரிந்து இருக்கிறார்.
“ பாரதி திரைப்படத்தில் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்கு தேசிய விருது பெற்ற பாவதாரிணி, அவருடைய இழப்பு நிச்சயம் சினிமாத்துறைக்கு ஒரு மிகப்பெரிய ஈடுகட்டமுடியாத இழப்பாக தான் இருக்கும் “