உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேலான வசூலை அள்ளியது விக்ரம்!
Vikram Crossed 300 Crores Collection In WW
நடிகர் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைவில் வெளியாகி இருந்த விக்ரம் உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேலான வசூலை அள்ளி இருக்கிறது.
பிரம்மாண்டம் என்ற பெயரில் கோடிகளை அள்ளிக்கொட்டி கோடிகளை அள்ள வேண்டும் என்ற பாணியை எல்லாம் உடைத்து எறிந்து, நல்ல கதைக்களம் இருந்தால் ரசிகர்கள் தானாகவே திரையரங்குகளை சூழ்வார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விக்ரம் விளங்கி இருக்கிறது. உலகளாவிய அளவில் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டு இன்னமும் நிமிர்ந்து தான் நிற்கிறது.
“ இன்னும் பல சாதனைகளை இந்த விக்ரம் தகர்க்க வேண்டும் என்பதே கோலிவுட் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது “