பொது தேர்தல் 2024 | உங்கள் தொகுதி வேட்பாளர்கள் யார் யார்? அவர்களின் முழுமையான விபரங்களை எளிதாக அறிவது எப்படி?
பொதுத்தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், உங்கள் தொகுதியில் வேட்பாளர்களாக நிற்பவர்களின் சுயவிவரங்களை எளிதாக அறிவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
பொதுத்தேர்தல் 2024 -ற்கான தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் யார் யார், அவர்களின் சுய விவரங்கள் என்ன, அவர்களின் சொத்து மதிப்பு என்ன, அவர்களின் கல்வி தகுதி என்ன, அவர்களின் குற்றவியல் விபரங்கள் என்ன? என்பது குறித்து வாக்காளர்கள் எளிதாக அறிவதற்கு என்றே தேர்தல் ஆணையம் ஒரு இணையதள பக்கம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது.
சரி எவ்வாறு வேட்பாளர்களின் விவரங்களை அறிவது?
1) முதலில் இந்த லிங்கை க்ளிக் செய்ய வேண்டும் : https://affidavit.eci.gov.in
2) அந்த லிங்கை க்ளிக் செய்ததும் மேலே காட்டியது போல ஒரு பக்கம் திறக்கும். அதில் செலக்ட் ஸ்டேட் என்னும் கட்டத்தில் உங்களது மாநிலத்தையும், செலக்ட் கன்ஸ்டிடூயன்சி என்பதில் உங்களது தொகுதியையும் கொடுத்து பில்டர் என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும்.
3) பில்டர் என்ற ஆப்சனை க்ளிக் செய்ததும், மேலே காட்டியது போல உங்கள் தொகுதியில் நிற்கும் அத்துனை வேட்பாளர்களின் பட்டியலும் வந்து நிற்கும். ஒவ்வொரு வேட்பாளர்களின் பெயர் மற்றும் அவர்களை பற்றிய குறிப்பிட்ட தகவல்களுடன் View More என்ற ஆப்சனும் இருக்கும். நீங்கள் பார்க்க நினைக்கும் வேட்பாளர்கள் குறித்த தகவல்களை அறிய, அந்த வேட்பாளர்களின் குறிப்பிட்ட கட்டத்தில் இருக்கும் அந்த வியூ மோர் என்ற ஆப்சனை அதற்கு பின் க்ளிக் செய்ய வேண்டும்.
4) அவ்வாறு க்ளிக் செய்ததும் அந்த வேட்பாளரின் படம் மற்றும் குறிப்பிட்ட சில தகவல்களுடன் Affidavit Download என்ற ஆப்சன் தோன்றும். அதை க்ளிக் செய்யும் பட்சத்தில் குறிப்பிட்ட அந்த வேட்பாளர்களின் ஒட்டு மொத்த தகவல்களும் பதிவிறக்கம் செய்யப்படும். நீங்களும் உங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களை பற்றி முழுவதும் அறிந்து கொள்ளவும் இயலும்.
“ இந்த தகவல்களில் குற்றவியல் விவரங்கள் குறித்து எல்லாம் இருப்பதால் வேட்பாளர்களை மதிப்பிட்டு, வாக்காளர்கள் வாக்களிக்க உதவிகரமாக அமையும் “