வட இந்தியாவில் கொட்டி தீர்க்கும் மழை, இதுவரை 41 பேர் கனமழைக்கு பலி!
Heavy Rain In North India 41 Dead 11 7 23 Idamporul
வட இந்தியாவில் கொட்டி தீர்க்கும் கனமழைக்கு இதுவரை 41 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 41 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கனமழையால் போக்குவரத்து, மின்சாரம் என அனைத்தும் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்து இருக்கிறது.
“ மழை தொடர்ந்து பெய்து வருவதால், மீட்பு பணிகளையும் தொடர முடியாமல் திணறி வருகிறது தேசிய பேரிடர் குழு, பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அரசு தரப்பில் இருந்து தகவல் கிடைத்து இருக்கிறது “